உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜி.பி.ஏ., புதிய வார்டுகளில் குப்பை சேகரிக்கும் மையங்கள்

 ஜி.பி.ஏ., புதிய வார்டுகளில் குப்பை சேகரிக்கும் மையங்கள்

பெங்களூரு: ''பெங்க ளூரில் புதிதாக பிரிக்கப்பட்ட அனைத்து வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் மையங்கள் நிறுவத் திட்டமிடப்பட்டு உள்ளது,'' என.ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் தெரிவித்து உள்ளார். பெங்களூரில் குப்பை பிரச்னை மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் முயற்சித்து வருகிறது. இவ்வகையில், புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 369 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் மையத்தை நிறுவ திட்டமிட்டு உள்ளது. ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் கூறியதாவது: ஜி.பி.ஏ.,க்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே 190 குப்பை சேகரிக்கும் மையங்கள் உள்ளன. இருப்பினும், புதிதாக குப்பை சேகரிக்கும் மையங்கள் திறக்கப்பட வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. எனவே, புதிதாக பிரிக்கப்பட்ட 369 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் மையங்கள் திறக்கப்படும். பிளாஸ்டிக் போன்ற மக்கா குப்பை சேகரிக்கும் நோக்கில் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் துப்புரவு பணியாளர்கள் ஓய்வு எடுத்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்படும். துப்புரவு ஊழியர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்கின்றனர் என்பதை அதிகாரிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை