உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கோல்டு கார்டு முன்பதிவு துவங்கியது

 கோல்டு கார்டு முன்பதிவு துவங்கியது

பெங்களூரு: மைசூரு தசராவுக்கான, 'கோல்டு கார்டு' ஆன்லைன் முன்பதிவு நேற்று துவங்கியது. மைசூரு தசரா அக்., 11 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இவ்விழாவுக்காக நகரம் தயாராகி வருகிறது. விழாவின் நிறைவு நாளான ஜம்பு சவாரியை காண, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருவர். தசரா விழாவை காண வசதியாக, மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ராவ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அக்., 21ம் தேதி நடக்கவுள்ள ஜம்பு சவாரி உட்பட முக்கிய நிகழ்வுகளுக்கு, சுற்றுலா பயணியரின் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவுக்கான கோல்டு கார்டு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முன்பதிவு, நேற்று காலை 11:30 மணிக்கு துவங்கியது. தசரா விழாவின் போது மிருககாட்சி சாலை, சாமுண்டி மலை, அரண்மனை, ஜம்பு சவாரி, டார்ச்லைட் பரேடு, ட்ரோன் கண்காட்சியை காண ஒருவருக்கு 6,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று, ஜம்பு சவாரியை மட்டும் பார்க்க ஒருவருக்கு 3,500 ரூபாய்; டார்ச்லைட் பரேடு காண 1,500 ரூபாய்; ட்ரோன் கண்காட்சியை காண ஒருவருக்கு 1,000 ரூபாயும் கட்டணயம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர், https://www.mysoredasara.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை