உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.2.61 கோடி தங்கம் மீட்பு

ரூ.2.61 கோடி தங்கம் மீட்பு

தாவணகெரே: தாவணகெரே மாவட்ட எஸ்.பி., உமா சங்கர் அளித்த பேட்டி:தாவணகெரே சி.எஸ்.பி., வங்கியில் தங்க நகைக்கு கடன் வழங்கும் அதிகாரியாக பணியாற்றியவர் டி.பி.சஞ்சய், 35. இவர் சில நாட்களுக்கு முன்பு, வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த, 2.61 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.63 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்றார்.வங்கி மேலாளர் சிவகுமார், கே.டி.ஜே., நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், வங்கியில் வேலை செய்யும் தங்க கடன் ஊழியரிடம் போலீசார் கேள்விகள் கேட்டனர்.அப்போது, அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். 2.61 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.63 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ