மேலும் செய்திகள்
வழிப்பறி செய்த 3 பேர் கைது
17-Oct-2026
இசையமைப்பாளர் தேவாவுக்கு முழு அரசு மரியாதை
18-Oct-2026
தங்கவயல்: தங்கவயலில் இறந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகளை அவரின் குடும்பத்தினர் தானம் செய்தனர். உரிகம் என்.டி.பிளாக் எலக்ட்ரிக்கல் லைன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கோபி - லீனஸ் தம்பதி. இவர்களின் மகள் ஸ்வேதா, 28, திருமணம் ஆகாதவர். பெங்களூரு ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அவர், சிறுநீரக நோயாளி. இந்நிலையில், திடீரென அவரின் மூளை செயல் இழந்தது. இதனால் அவரை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து, உறவினர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் அவர் இறந்தார். அவரின் குடும்பத்தினர், தனது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். அதற்கு பின், நேற்று அவரின் உடல், தங்கவயல் சாம்பியன் ரீப் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
17-Oct-2026
18-Oct-2026