உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு அறிவிப்புகள், அறிக்கை ஒரே தளத்தில் பார்க்கலாம்

அரசு அறிவிப்புகள், அறிக்கை ஒரே தளத்தில் பார்க்கலாம்

பெங்களூரு: கர்நாடக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் வெளியாகும் உத்தரவுகள், சுற்றறிக்கைகள் குறித்த அனைத்து தகவல்களையும் பொது மக்கள் எளிதில் அறியும்படி, ஒரே தளத்தில் வெளியிடும் நடவடிக்கையில் சி.இ.ஜி., எனும் மின் ஆளுமை மையம் ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி திலீஷ் சஷி கூறியதாவது:பல அரசு துறைகளில் வெளியிடப்படும் உத்தரவுகள் அனைத்தும், ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இதன் மூலம் மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடகாவில் செயல்படுத்தப்படுகிறது.முதல் கட்டமாக ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் உட்பட ஐந்து துறைகளை வைத்து செயல்படுத்த உள்ளோம். அதன் பின்னரே, பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.இதற்காக ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடி உள்ளோம். அரசு உத்தரவுகளும், சுற்றறிக்கைகளும் சில நேரங்களில் அரசு ஊழியர்களுக்கே கிடைப்பதில்லை. இனிமேல் இந்த பிரச்னை எழாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை