உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பைக் டாக்சிகளுக்கு தடை உத்தரவு தாமதமாக நிறைவேற்றிய அரசு

பைக் டாக்சிகளுக்கு தடை உத்தரவு தாமதமாக நிறைவேற்றிய அரசு

பெங்களூரு: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பைக் டாக்சி சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் ராமலிங்கரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.நீதிமன்றம் உத்தரவிட்டு நான்கு வாரங்களுக்கு பின், தாமதமாக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.பைக்குகளை போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்ய, கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி, ஊபர் இந்தியா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தன. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷியாம் பிரசாத், ஆறு வாரங்களுக்கு பைக் டாக்சி சேவையை நிறுத்த வேண்டும்; இதனை அரசு உறுதி செய்வதுடன், தேவையான விதிகளை வகுக்க வேண்டும் என்று, கடந்த 2ம் தேதி உத்தரவிட்டார்.ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும், சில நிறுவனங்களின் பைக் டாக்சி சேவை வழங்கியதாக கூறப்பட்டது.இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தனது துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், 'உயர் நீதிமன்ற உத்தரவின்படி பைக் டாக்சி சேவைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.நீதிமன்றம் உத்தரவிட்டு நான்கு வாரங்களுக்கு பின் தான், உத்தரவை அமல்படுத்தவே அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.இனிமேலாவது விழித்து கொண்டு, பைக் டாக்சிகளை நிறுத்த, அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.இன்னும் இரண்டு வாரம் கழித்து, பைக் டாக்சி குறித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படலாம் என்றும், தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி