உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்

அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்

பெங்களூரு: ''புதிதாக அரசு மருத்துவமனை கட்டுவதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துவதே எங்கள் அரசின் இலக்கு,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் காதர் கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் புதிதாக அரசு மருத்துவமனைகள் கட்டுவதற்கு பதிலாக, ஏற்கனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சிறுநீரக பிரச்னையால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, வீடு தேடி, 'டயாலிஸ்' சேவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை, சிறந்த சேவை வழங்குவதே அரசின் நோக்கமாகும். தரம் வாய்ந்த, 750 புதிய ஆம்புலன்ஸ்கள் விரைவில் சேவைக்கு வரும். அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஐந்து படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ்கள் வெறும் 20 நிமிடங்களுக்குள் சென்றடைய வேண்டும். இல்லையெனில், 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மகளிர் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. புற்றுநோய் மருந்துகள் குறைந்த விலையில் தற்போது கிடைக்கின்றன. சாமானிய மக்களின் உடல்நலனில் மத்திய அரசு அக்கறை காண்பிப்பதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை