உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குழந்தை பேறு இல்லாத தம்பதிக்கு செயற்கை கருத்தரிப்புக்கு அரசு சலுகை

 குழந்தை பேறு இல்லாத தம்பதிக்கு செயற்கை கருத்தரிப்புக்கு அரசு சலுகை

பெங்களூரு: குழந்தை பேறு இல்லாத தம்பதிக்கு, பணம் பற்றாக்குறையால் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் ஐ.வி.எப்., எனும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை, ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய கர்நாடகா காப்பீடு திட்டத்தின் கீழ் சேர்க்க, அரசு முக்கிய முடிவை எடுத்து உள்ளது. சமீப காலங்களில் பல்வேறு காரணங்களால், தம்பதியருக்கு குழந்தை பிறப்பதில்லை. 20 முதல், 25 சதவீதம் வரையிலான பெண்கள், கர்ப்பம் தொடர்பான பிரச்னையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, தாமதமாக திருமணம் செய்து கொள்வது, கடுமையான வேலை அழுத்தம், நிதி சிக்கல்கள் உட்பட பல்வேறு காரணங்களால், பல பெற்றோருக்கு குழந்தை பிறப்பதில்லை. எனவே, குழந்தை பெறுவதற்காக, பல பெற்றோர் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை நாடுகின்றனர். ஆனால், இதற்காக தனியார் மருத்துவமனைகளில், லட்சக்கணக்கான ரூபாய் செவழிக்க வேண்டியிருப்பதால், இந்த சிகிச்சை ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாததாக உள்ளது. குழந்தை பெற முடியாததால், தம்பதியர் இக்காரணத்தால், மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது, அத்தகைய பெற்றோருக்கு வரப்பிரசாதமாக, சுகாதார துறை முன்வந்து உள்ளது. ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய கர்நாடகா திட்டத்தின் கீழ், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வசதிகள் வழங்க, மாநில அரசு முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் செயற்கை கருத்தரப்பு சிகிச்சைக்கு, காப்பீடு திட்டத்தின் கீழ், 1.20 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். மாநில சுகாதார துறை, ஒரு காப்பீடு திட்டத்தின் கீழ், விலை உயர்ந்த சிகிச்சையை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்