உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஹெச்.ஐ.வி., கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை

 ஹெச்.ஐ.வி., கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை

பெங்களூரு: ''ஹெச்.ஐ.வி., நோயாளிகள் குறித்து சில தகவல்கள் தவறாக இருக்கலாம். கர்நாடகாவில் இந்த நோ யை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் காதர் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டி, மாநிலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், வருங்காலத்தில் நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கிறது. நோயாளிகள் குறித்து சில தகவல்கள் தவறாக இருக்கலாம். கர்நாடகாவில் ஹெச்.ஐ.வி., நோயாளிகள் எணிக்கை 19,000 ஆக உள்ளது. அவர்களின் ஆரோக்கியம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. நோயை கட்டுப்படுத்துவது குறித்து, பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12ம் தேதி வரை, விழிப்புணர்வு மாநாடு, இளைஞர் மாநாடு நடத்தப்படும். என்.ஜி.ஓ.,க்களுடன் ஒருங்கிணைந்து கருத்தரங்கு நடத்தப்படும். ஹெச்.ஐ.வி., பரிசோதனை இரண்டு பேருக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரசவ நேரத்தில் தாய்க்கும், ரத்ததான முகாம்களில் ரத்தம் கொடுப்போருக்கும் பரிசோதனை கட்டாயம். கர்நாடகாவில் ஹெச்.ஐ.வி., நோய் கட்டுக்குள் உள்ளது. கடந்த மூன்று மாதங்களில், 3,091 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை