மேலும் செய்திகள்
புதுச்சேரி, தெலுங்கானா கவர்னர்கள் சந்திப்பு
14-Jul-2025
கொப்பால்: கொப்பால் சென்ற கவர்னர் தாவர்சந்த் கெலாட், 30 நிமிடங்களில் அஞ்சநாத்ரி மலையில் ஏறினார். கொப்பால் மாவட்டம், கங்காவதியில் உள்ள அஞ்சநாத்ரி மலையில் ஸ்ரீராமரின் சீடனான ஹனுமன் பிறந்தார் என நம்பப்படுகிறது. இம்மலைக்கு பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில், தன் குடும்பத்தினருடன் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ள கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், நேற்று கொப்பால் மாவட்டத்துக்கு வந்தார். கங்காவதியில் உள்ள பிரசித்தி பெற்ற அஞ்சநாத்ரி மலைக்கு சென்ற அவர், 30 நிமிடங்களில் 575 படிக்கட்டுகளை ஏறி, ஹனுமனை தரிசனம் செய்தார். 20 நிமிடங்கள் அங்கிருந்த அவருக்கு, கலெக்டர் சுரேஷ் எத்னால், மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி வர்னீத் நேகி உள்ளிட்ட அதிகாரிகள் நினைவுப்பரிசு வழங்கினர்.
14-Jul-2025