மேலும் செய்திகள்
கவர்னர் பதவியை பறித்த பவழ வர்த்தகம்
04-May-2025
பெங்களூரு: கவர்னர் தாவர்சந்த் கெலாட், லிப்டில் சிக்கிக் கொண்டதால், சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.மைசூரில் உள்ள கர்நாடக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்க வேண்டியிருந்தது. எனவே நேற்று மதியம் அவர் மைசூரு சென்றிருந்தார்.மாடிக்குச் செல்ல லிப்டில் ஏறியபோது, லிப்ட் பாதியில் பழுதடைந்து நின்றுவிட்டது. கவர்னரும், அவருடன் இருந்த பாதுகாப்பு ஊழியர்களும் லிப்டில் சிக்கிக் கொண்டனர்.தொழில்நுட்ப இன்ஜினியர்கள் அங்கு வந்து, லிப்டை சோதித்தபோது, 'ஓவர் லோட்' என்பது தெரிந்தது. அதன்பின் லிப்டை சரி செய்தனர்.சில ஊழியர்களை வெளியேற்றிய பின், லிப்ட் இயங்க துவங்கியது. நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டபோது, லிப்ட் சகவாசமே வேண்டாம் எனக்கருதி, கவர்னர் படிகளில் இறங்கிச் சென்றார்.சிறிது நேரம் லிப்டில் சிக்கியதால், கவர்னர் சோர்வடைந்து தென்பட்டார். இந்த சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
04-May-2025