உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விதிகள் மீறி இயங்கிய விடுதிகள் கிராம பஞ்சாயத்து ‘நோட்டீஸ்’

விதிகள் மீறி இயங்கிய விடுதிகள் கிராம பஞ்சாயத்து ‘நோட்டீஸ்’

ஆனேகல்: பெங்களூரு ஆனேகல்லில் சட்ட விரோதமாக இயங்கிய, 35க்கும் மேற்பட்ட பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளுக்கு, பகடெனஹள்ளி கிராம பஞ்சாயத்து ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. பெங்களூரில் 10 ஆயிரத்துக்கு ம் மேற்பட்ட அனுமதி பெற்ற பி.ஜி.,க்கள் இயங்குகின்றன. 4,000க்கும் மேற்பட்ட பி.ஜி.,க்கள் அனுமதி பெறாமல் இயங்குகின்றன. பெங்களூரு ஆனேகல் பகடெனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈடன் கார்டன், நட்சத்ரா லே – அவுட், ஸ்ரீ சாய் லே – அவுட் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி பி.ஜி.,க்கள் இயங்கி வருவதாக தகவல் கிடைத்தன. இந்த பி.ஜி.,க்களில் குடிநீர், கழிவுநீர் மேலாண்மை உட்பட அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் செய்யவில்லை. அத்துடன் இப்பகுதியில் உள்ள அலையன்ஸ் கல்லுாரி மாணவர்களை குறிவைத்து சில பி.ஜி.,க்கள் செயல்படுவதாகவு ம், இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, இப்பகுதியில் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். இதில், 35க்கும் மேற்பட்ட பி.ஜி.,க்களில், இரண்டு மாடி கட்டடத்துக்கு அனுமதி கேட்டு, நான்கு அல்லது ஐந்து மாடி கட்டடங்களாக கட்டி உள்ளனர். இரண்டு மாடிகளுக்கு மேல் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த தளங்களில் வசித்து வந்தவர்களை, கட்டடத்தில் இருந்து வெளியேறும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மேலும், விதிகளை மீறிய பி.ஜி.,க்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்து, அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை