உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரையாண்டு கடந்தும் மாணவருக்கு ஷூ இல்லை

அரையாண்டு கடந்தும் மாணவருக்கு ஷூ இல்லை

பெங்களூரு: பள்ளிகள் திறந்து அரையாண்டு கடந்தும், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய எல்லைக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு கடந்துள்ளது. ஆனால் ஜி.பி.ஏ.,வுக்கு உட்பட்ட பள்ளிகளின் 22,210 ஏழை மாணவர்களுக்கு ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்வெட்டர்களும் இல்லை. கிழிந்த ஷூக்களை போட்டுக்கொண்டு, மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ