உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  டிவி தொடர்களை பார்க்காதீர்கள் ஹாவேரி எஸ்.பி., அறிவுரை

 டிவி தொடர்களை பார்க்காதீர்கள் ஹாவேரி எஸ்.பி., அறிவுரை

ஹாவேரி: ''சின்னத்திரை தொடர்களால், குடும்பங்கள் பாழாகின்றன. குறிப்பாக பெண்களுக்கு தவறான குணங்களை கற்றுத்தருகின்றன,'' என ஹாவேரி எஸ்.பி., யசோதா தெரிவித்தார். ஹாவேரியின், ஹுக்கேரி மடத்தின் திருவிழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஹாவேரி எஸ்.பி., யசோதா பேசியதாவது: பெண்கள் தங்களுக்கு பிடித்தமான சின்னத்திரை தொடர்களை விட்டு விட்டு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த திருவிழாவின் மகத்துவம் என்ன என்பது தெரிந்தது. சின்னத்திரை தொடர்களை பார்க்காதீர்கள் என, நான் கூறவில்லை. தொடர்களுக்கு அடிமையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. பின் வாசல் வழியாக திருடர்கள் வீட்டுக்குள் வந்து, திருடி சென்றாலும் தெரிவது இல்லை. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பெண்களை குறி வைத்து தொடர்கள் தயாராகின்றன. இதை விட்டு விலகி இருக்க வேண்டும். பெண்கள் என் மீது கோபம் கொண்டாலும் கவலையில்லை. ஒரு போலீஸ் அதிகாரியாக, இதை கூறியே ஆக வேண்டும். தொடர்களில் ஒவ்வொரு காட்சியிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சதி செய்வது, அவர்களுக்கு கெட்டது நினைக்கும் பெண்ணின் கதாபாத்திரங்கள் உள்ளன. இது காலத்தின் கொடுமை. பொது மக்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை திரையில் காட்டுவதாக, பொய் சொல்லி தொடர்களை திரையிடுகின்றனர். பெண்களிடம் தவறான குணங்களை உருவாக்குகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை