உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  2 மணி நேரம் பெய்த கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 2 மணி நேரம் பெய்த கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தங்கவயல்: தங்கவயலில், நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்கி, இரவு 7:00 மணி வரை விடாமல் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் நீர் புகுந்தது. ராபர்ட்சன்பேட்டை, 4வது பிளாக் பகுதியில், மழைநீர், பலரின் வீடுகளில் புகுந்தது. இதனால், மழைநீரை வெளியேற்ற மக்கள் சிரமப்பட்டனர். சில இடங்களில், ஆலங்கட்டி மழை பெய்தது. உரிகம்பேட்டை, பிஷர் லைன் பகுதி, ஆண்டர்சன்பேட்டை தியாகி சாமிநாத பிள்ளை வீடுள்ள இடத்தில் சீரான மழைநீர் கால்வாய் வசதி, இல்லாததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கழிவுநீரும் சாக்கடையும், மழைநீருடன் கலந்து வீட்டுக்குள் புகுந்தன. வாகனங்கள் செல்ல முடியவில்லை. இரண்டு மணிநேரம் மின் தடை செய்யப்பட்டது. சொர்ணகுப்பம் சதுக்கம் பகுதியில் மழை நீர் வெளியேறாததால் அங்கும் வாகனங்கள் நகர முடியாமல் தவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை