| ADDED : டிச 07, 2025 06:46 AM
தங்கவயல்: தங்கவயலில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர், நாளை முதல் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்று போலீஸ் எஸ்.பி., ஷிவம்ஷு ராஜ்புத் உத்தரவிட்டுள்ளார். கோலார் போலீஸ் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர், ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை போலீசார் செய்து வந்தனர். சமூக நல தொண்டு நிறுவனங்கள், ஹெல்மெட்களை இலவசமாக வழங்கினர். ஹெல்மெட் அணிந்து பயணிப்போருக்கு போலீசார், ரோஜா பூக்கள் கொடுத்து உற்சாகப்படுத்தினர். தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் பங்கார்பேட்டை, காமசமுத்ரா, பூதிக்கோட்டை பேத்தமங்களா, கேசம்பள்ளி, பெமல் நகர், உரிகம், ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை என ஒன்பது போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த ஒன்பது போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இம்மாதம் 8 ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீஸ் எஸ்.பி., ஷிவம்ஷு ராஜ்புத் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தங்கவயல் போலீஸ் மாவட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆட்டோக்களில் போலீசார் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஹெல்மெட் அணிய தவறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராதம் வசூலிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் இந்த திட்டம் இல்லை. விபத்தில் இருந்து உயிர் காக்கும் நோக்கத்தில் கட்டாயம் ஆக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.