உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாலுாரில் ரூ.21.5 கோடியில் ஹைடெக் பஸ் நிலையம்

மாலுாரில் ரூ.21.5 கோடியில் ஹைடெக் பஸ் நிலையம்

மாலுார்: ''மாலுாரில் 21.5 கோடி ரூபாயில் 'ஹைடெக்' பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது,'' என, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா தெரிவித்தார். மாலுார் பஸ் நிலையத்தை பார்வையிட்ட தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா, அங்குள்ள கடைக்காரர்களுடன் கலந்துரையாடினார். பின் அவர் கூறியதாவது: மாலுாரில் புதியதாக பஸ் நிலையம் அமைக்க பல்வேறு காரணங்களால் முடியாமல் போனது. அக்டோபர் 31ம் தேதி முதல்வர் சித்தராமையா மாலுார் வருகிறார். அப்போது, 21.5 கோடி ரூபாய் செலவில் 'மாலுார் ஹைடெக் பஸ் நிலையம்' அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக, பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளை அகற்றும் பணிகள் தொடங்குகின்றன. ஹைடெக் பஸ் நிலையம் உருவாகும் வரை அரசு ஜூனியர் கல்லுாரி மைதானத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும். புதிய பஸ் நிலையம் அமையும்போது விதிகளின்படி ஏலம் விடப்பட்டு, இங்குள்ள கடைக்காரர்களுக்கே கடைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை