உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நிதி ஒதுக்குவதில் பாகுபாடு அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

நிதி ஒதுக்குவதில் பாகுபாடு அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பெங்களூரு: நிதி ஒதுக்குவதில் அரசு பாகுபாடு காட்டுவதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜெகதீஷ் குடகுந்தி தொடர்ந்த வழக்கில், அரசுக்கு, உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாகல்கோட் ஜமகண்டி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜெகதீஷ் குடகுந்தி. இவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 'நிதி ஒதுக்குவதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு தலா 50 கோடி ரூபாயும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு தலா 25 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது' என கூறி இருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !