உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கிரிஷ் மட்டன்னவர் மீதான வழக்கு ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

கிரிஷ் மட்டன்னவர் மீதான வழக்கு ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக, சமூக ஆர்வலர் கிரிஷ் மட்டன்னவர் மீதான வழக்கை ரத்து செய்ய, உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக, சின்னை யா என்பவரை பொய் கூற வைத்து, தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்திற்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக, சமூக ஆர்வலர் கிரிஷ் மட்டன்னவர் மீது, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்தது. வழக்கை ரத்து செய்ய கோரி கிரிஷ் மட்டன்னவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி நாகபிரசன்னா நேற்று கூறிய தீர்ப்பு: தர் மஸ்தலா வழக்கில் சதி திட்டம் தீட்டப்பட்டதற்கான, வலுவான ஆதாரம் உள்ளது. மனுதாரர் மீது குற்றவியல் சதி மற்றும் ஆதாரங்களை பொய்யாக ஜோடித்தல் என கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படி இருக்கும் போது ஆரம்ப கட்டத்திலேயே, வழக்கை ரத்து செய்வது சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவது போன்றதாகும். எஸ்.ஐ.டி., சேகரித்த ஆதாரங்களின் உண்மை தன்மையை, உயர் நீதிமன்றம் தராசு போட் டு எடை பார்க்க முடியாது. மனுதாரர் மீது தவறு இல்லை என்றால் விசாரணை நீதிமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும். அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை