உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 20ல் காமராஜர் பிறந்த நாள் இந்து நாடார் சங்கம் அழைப்பு

20ல் காமராஜர் பிறந்த நாள் இந்து நாடார் சங்கம் அழைப்பு

கலாசிபாளையம்: 'கர்நாடக இந்து நாடார் அசோசியேஷன் இம்மாத செயற்குழு கூட்டம், கலாசிபாளையம் சங்க அலுவலகத்தில் சங்க முன்னாள் பொருளாளர் சித்தானந்தன் தலைமையில் நடந்தது.உறுப்பினர்களை வரவேற்று பேசிய சங்க செயலர் கிருஷ்ணவேணி, ''வரும் 20ம் தேதி சங்கம் சார்பில் காமராஜர் 123வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.''சங்க உறுப்பினர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.பின்னர் நடந்த செயற்குழு கூட்டத்தில், சங்க துணைத்தலைவர் குருசாமி பேசுகையில், ''காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தாமோதரன், கர்நாடக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கெம்பண்ணா பங்கேற்கின்றனர்.''மேலும் பல சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்,'' என்றார்.சங்க முன்னாள் தலைவர் சந்திரசேகரன் பேசுகையில், ''இவ்விழாவில், காமராஜர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, சங்கம் சார்பில் பள்ளிப் பைகள், வழங்கப்பட உள்ளன,'' என்றார்.சங்கத்தின் மூத்த உறுப்பினர் முருகன் பேசுகையில், ''எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு சங்கம் சார்பில் பாராட்டும், ஊக்கத்தொகையும் வழங்கப்படும்,'' என்றார்.சங்க உறுப்பினர் விஜயகுமார் பேசுகையில், ''செப்டம்பரில் சக்லேஸ்புராவுக்கு சுற்றுலா செல்ல விருப்பம் உள்ள உறுப்பினர்கள், பதிவு செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.சங்க வரவு - செலவு கணக்கு விபரங்களை பொருளாளர் ஜவஹர் தாக்கல் செய்தார்.மூத்த உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !