உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆர்.எஸ்.எஸ்., அமைப்பால் தான் நாட்டில் ஹிந்துத்வா நீடிக்கிறது

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பால் தான் நாட்டில் ஹிந்துத்வா நீடிக்கிறது

கலபுரகி : ''ஆர்.எஸ்.எஸ்.,சால் தான் நாட்டில் ஹிந்துத்வா நீடிக்கிறது,'' என முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஆர்.எஸ்.எஸ்.,சால் தான், நாட்டில் ஹிந்துத்வா நீடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.,சை பற்றி பேச, பிரியங்க் கார்கே யார். அவரது பைத்தியக்காரத்தனத்தை குணப்படுத்த, உலகில் எந்த மருத்துவமனையும் இல்லை.

உச்ச நீதிமன்றம்

ஒலி மாசு கட்டுப்பாடு குறித்து உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒலி மாசு கட்டுப்பாடு அவசியம். குறிப்பாக, மத தலங்களில் சத்தமாக ஒலிபரப்பப்படும் ஒலிபெருக்கிகள் இதன் கீழ் வருகின்றன.மஹாராஷ்டிராவில் ஏற்கனவே 1,500 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு உள்ளன. இதை வரவேற்ற பதான் என்ற நபர், அனைத்து மதத்தினரும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று கூறி உள்ளார். கர்நாடகாவிலும் இந்நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும்.மாநில பா.ஜ., தலைவர் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடத்தவில்லை. கட்சிக்குள் குழப்பம் இருப்பது உண்மை தான்; இல்லை என்று கூறவில்லை.

பாராட்டு

ஷிவமொக்காவில் சிக்கந்துார் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. எந்தவொரு பெரிய திட்டத்துக்கும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பாராட்டு தேவை. நெறிமுறைகளை மீறக்கூடாது. பாலத்தின் திறப்பு விழாவுக்கு, அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகள் சேரும். இப்பாலத்தின் பணி, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆட்சியின் கீழ் தொடர்ந்து நடந்து வந்தது.நாடு முழுதும் காங்கிரஸ் அழிந்து வருகிறது. கர்நாடகாவில் மட்டுமே இப்பவோ... அப்பவோ... என ஊசலாடி வருகிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி மேலிடம் அறிவிக்க வேண்டும். உங்களை நீங்களே முதல்வராக அறிவித்து கொள்ளக்கூடாது. துணை முதல்வர் சிவகுமாருக்கு மட்டும் கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு எம்.எல்.ஏ.,க்களுடன் சுர்ஜேவாலா ஆலோசனை கூட்டம் நடத்தியதே சான்று.'இரண்டாவது தேவராஜ் அர்ஸ்' என்று தன்னை தானே அறிவித்து கொள்ளும் சித்தராமையா, பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி கிடைக்க தவறிவிட்டார். தற்போது அவருடன் அவரது உறவினர்களையும், சில முஸ்லிம் தலைவர்களை மட்டுமே வைத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ