உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வீடு புகுந்து திருடியவர் கைது

 வீடு புகுந்து திருடியவர் கைது

தங்கவயல்: காமசமுத்திரா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட குந்தரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கே.வி.உமாபதி என்பவரின் வீட்டில், 500 கிராம் வெள்ளி நகைகள், 4,000 ரூபாய் ரொக்கம் திருடப்பட்டதாக, காமசமுத்திரா போலீஸ் நிலையத்தில் கடந்த, ஏப்ரல் 4ம் தேதி புகார் செய்திருந்தார். இது குறித்து சிறப்பு போலீஸ் படையினர் விசாரித்தனர். இதுதொடர்பாக, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த தருண், 26, என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து, பல இடங்களில் திருடப்பட்ட 7.8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 38.60 கிராம் தங்க நகைகள், 577 கிராம் வெள்ளி பொருட்கள், 10,000 ரூபாய் ரொக்கம், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை