உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மக்களிடம் நடந்து கொள்வது எப்படி? போலீசாருக்கு வழிகாட்டுதல் வெளியீடு

மக்களிடம் நடந்து கொள்வது எப்படி? போலீசாருக்கு வழிகாட்டுதல் வெளியீடு

பெங்களூரு: மக்களிடம் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை டி.ஜி.பி., சலீம் வெளியிட்டுள்ளார். பொது மக்களிடம் போலீசார் மோசமாக நடந்து கொள்ளும் வீடியோக்கள், சமீப காலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பி வருகின்றன. இதை தீவிரமாக எடுத்துக் கொண்ட டி.ஜி.பி., சலீம் போலீசாருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: l போலீஸ் நிலையத்திற்கு வரும் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் l மக்கள் குறைகளை பொறுமையாக கேட்க வேண்டும். சட்டப்படி புகார்களை தாமதமின்றி பதிவு செய்ய வேண்டும் l ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் l எந்த சூழ்நிலையிலும் தனிநபர் அல்லது அமைப்புகளிடமிருந்து சட்டவிரோத உதவிகளை பெறக்கூடாது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் l பணி முடிந்த பிறகும் கூட ஒழுங்காக நடக்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் நாட்குறிப்புகள், வழக்கு கோப்புகள் குறித்து துல்லியமான தரவுகளை சேகரிக்க வேண்டும். விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் l பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகளாக இருந்தால் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்கவும் l சரியான நேரத்தில் அலுவலக பணிகளை மேற்கொள்ளவும். அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. வன்முறையை தவிர்ப்பது, நல்ல நடத்தைக்கு முன்மாதிரியாக இருக்கவும் l அனைத்து வழக்குகளையும் நேர்மையான முறையில் விசாரித்து, மக்களிடம் நற்பெயரை வாங்க வேண்டும் l ல ஞ்சம் வாங்க முயற்சிக்கும் அதிகாரிகள் குறித்து மூத்த அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள் l பிற காவல் நிலை யத்தின் எல்லைக்குள் நடந்த சம்பவங்கள் குறித்து புகார்களை பூஜ்ஜிய எப்.ஐ.ஆர்., முறைப்படி பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு எப்.ஐ.ஆர்.,ஐ மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை