ஹூப்பள்ளி - வாரணாசி 3 நாட்கள் சிறப்பு ரயில்
பெங்களூரு: 'மஹா கும்பமேளாவுக்கு செல்லும் பயணியர் வசதிக்காக, ஹூப்பள்ளியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:ரயில் எண் 07383: ஹூப்பள்ளி - வாரணாசி சிறப்பு விரைவு ரயில், 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 8:00 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு வாரணாசி சென்றடையும்.மறுமார்க்கத்தில் ரயில் எண் 07384: வாரணாசி - ஹூப்பள்ளி சிறப்பு விரைவு ரயில், 17, 24, மார்ச் 3 ஆகிய தேதிகளில் அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 12:45 மணிக்கு ஹூப்பள்ளி வந்தடையும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.