உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 2வது மனைவியை அடித்து கொன்ற கணவர்  கைது

2வது மனைவியை அடித்து கொன்ற கணவர்  கைது

எலஹங்கா : நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், இரண்டாவது மனைவியை மரக்கட்டையால் அடித்து கொன்று, தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சைதுல், 37. குடும்ப தகராறால் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். அமினா, 35 என்பவரை காதலித்து, 2019ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தனக்கு முதல் திருமணம் நடந்ததை, அமினாவிடம் மறைத்தார். சைதுலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது பற்றி, கடந்த ஆண்டு அமினாவுக்கு தெரிந்தது. இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சைதுலும், அமினாவும் பெங்களூரு வந்தனர். எலஹங்காவில் வாடகை வீட்டில் வசித்தனர். சைதுல் கூலி வேலை செய்தார். இதற்கிடையில் அமினா, மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி மொபைல் போனில் பேசினார். இதனால், அந்த வாலிபருக்கும், அமினாவுக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்று சைதுல் சந்தேகித்தார். இதுபற்றி மனைவியிடம் கேட்டு தகராறு செய்தார். கடந்த 3ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில், அமினா தலையில் மரக்கட்டையால் அடித்துவிட்டு கணவர் தப்பினார். உயிருக்கு போராடிய அமினாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 6ம் தேதி அமினா இறந்தார். எலஹங்கா நியூ டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த சைதுலை தேடினர். ஆந்திராவின் ராஜமுந்திரியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு அழைத்து வந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ