உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது

மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது

ஹெப்பகோடி: நடத்தையில் சந்தேகத்தில், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்று, மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, ஹெப்பகோடியை சேர்ந்தவர் ரேஷ்மா, 37. இவரது கணவர் சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். தன் 15 வயது மகளுடன், ரேஷ்மா தனியாக வசித்தார். இன்ஸ்டாகிராம் மூலம் ரேஷ்மாவுக்கும், பிரசாந்த், 33, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், 15ம் தேதி வீட்டின் குளியல் அறையில், ரேஷ்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குளியல் அறைக்கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மின்சாரம் பாய்ந்து மனைவி இறந்ததாக, அக்கம்பக்கத்தினரிடம் பிரசாந்த் கூறினார். ஆனாலும் தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக, ரேஷ்மாவின் மகள், போலீசிடம் கூறினார். போலீசார், பிரசாந்திடம் விசாரித்தனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்று, மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். அவர் நேற்று கைது செய்யப்பட்டார்; விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

visu
அக் 26, 2025 06:53

வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தால் சந்தேகம் தன மேல் வரும் என்று கூட தெரியாம கொலை செய்யுறாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை