உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சந்தேகத்தால் 2வது மனைவியை குத்தி கொன்ற கணவர் கைது

சந்தேகத்தால் 2வது மனைவியை குத்தி கொன்ற கணவர் கைது

அம்ருதஹள்ளி: நடத்தையில் சந்தேகத்தால், இரண்டாவது மனைவியை கழுத்தில் கத்தியால் குத்திக் கொன்ற, கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். துமகூரின் பாவகடாவை சேர்ந்தவர் அஞ்சலி, 21. இவருக்கு திருமணம் முடிந்து கணவர், இரண்டு வயதில் மகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் கணவரை அஞ்சலி பிரிந்தார். பெங்களூரில் வேலை செய்தார். இதேபோன்று மனைவியை விவாகரத்து செய்த, யாத்கிரின் சுரபுராவை சேர்ந்த ரவிசந்திரன், 25, என்பவரும், பெங்களூரில் பணி செய்தார். அஞ்சலிக்கும், ரவிசந்திரனுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின், முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தையை, உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, இரண்டாவது கணவருடன் பெங்களூரு கங்கம்மா லே - அவுட்டில் அஞ்சலி குடியேறினார். காய்கறி கடையில் அஞ்சலியும், கூரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக ரவிசந்திரனும் வேலை செய்தனர். இந்நிலையில் அஞ்சலிக்கு, வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக, ரவிசந்திரன் சந்தேகித்தார். இந்த விவகாரத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், மனைவியின் கழுத்தில் கத்தியால் கணவர் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அஞ்சலி மயக்கினார். அவர் இறந்ததாக நினைத்து, அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று, கணவர் சரண் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் சென்றபோது, அஞ்சலிக்கு உயிர் இருப்பது தெரிந்தது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனாலும் வழியிலேயே அவர் இறந்தார். நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கொன்றதாக, போலீசில் ரவிசந்திரன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை