உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனைவியின் கள்ளக்காதலரால் கணவர் தற்கொலை?

மனைவியின் கள்ளக்காதலரால் கணவர் தற்கொலை?

பெங்களூரு: மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அனுப்பி, கள்ளக்காதலர் அவமதித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரின் சர்ஜாபுராவில் வசித்தவர் முனிகிருஷ்ணா, 35, ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி, ஆறு வயதில் மகன் உள்ளார். தற்போது அவரது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். சில ஆண்டுகளாக முனிகிருஷ்ணாவின் மனைவிக்கும், குமார், 35, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த கணவர் கண்டித்தும், கள்ளத்தொடர்பு நீடித்தது. இதற்கிடையே, குமார் அவ்வப்போது, அப்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோகள், வீடியோகளை முனிகிருஷ்ணாவுக்கு அனுப்பி, தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 27ம் தேதி மாலை, இவர் ஆட்டோவில் செல்லும் போது, 'நானும், உன் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்களை பார்த்தும், நீ ஏன் உயிருடன் இருக்கிறாய்' என, கிண்டல் செய்துள்ளார். குமாரின் பேச்சால், முனிகிருஷ்ணா மன வருத்தத்திற்கு ஆளானார். வீட்டுக்கு வந்து, தன் உறவினர்களுக்கு போன் செய்து, நடந்ததை விவரித்து தனக்கு வாழ விருப்பம் இல்லை என்றார். அன்றிரவே, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவரது சகோதரர், சர்ஜாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்படி வழக்கு பதிவாகியுள்ளது. முனிகிருஷ்ணாவை தற்கொலைக்கு துாண்டிய குமார், தலைமறைவாக உள்ளார். அவரை தேடுகிறோம். முனிகிருஷ்ணாவின் மனைவி கர்ப்பிணி என்பதால், அவரை இன்னும் கைது செய்யவில்லை. இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ