உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மது போதையில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை

மது போதையில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை

பெங்களூரு: மனைவியை 15 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரின் உல்லால் பிரதான சாலையின், பிரஸ் லே - அவுட்டில் வசித்தவர் தர்மசீலன், 29. இவரது மனைவி மஞ்சு, 27. இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தர்மசீலன் பெயின்டராகவும், மஞ்சு தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றினர். தமிழகத்தில் இருந்து, ஒரு மாதத்துக்கு முன் தான் பெங்களூருக்கு வந்தனர். பிரஸ் லே - அவுட்டில் வாடகை வீட்டில் வசித்தனர். மது பழக்கத்துக்கு அடிமையான தர்மசீலன், ஏதாவது ஒரு காரணத்தை வைத்து, மனைவியுடன் தினமும் சண்டை போடுவார். அதேபோன்று, நேற்று முன்தினமும் தம்பதிக்கிடையே வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த தர்மசீலன், கத்தியால் மனைவியை 15 முறை சரமாரியாக குத்திக் கொலை செய்தார். பின் தானும் அறைக்குள் சென்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஞானபாரதி போலீசார், இருவரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை