உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சொத்துக்காக மனைவி கொலை கணவர், மகன் கைது

சொத்துக்காக மனைவி கொலை கணவர், மகன் கைது

பெங்களூரு : சொத்துக்காக மனைவியை கொலை செய்த கணவரும், மகனும் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவின், குருபரதொட்டி கிராமத்தில் வசிப்பவர் சிவராஜ், 48. இவரது மனைவி கவுரம்மா, 45. தம்பதிக்கு சித்தராஜ், 22, என்ற மகன் உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக, கணவர், மகனுடன் கவுரம்மாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் கவுரம்மா தனியாக வசித்து வந்தார். இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இதை தங்கள் பெயரில் எழுதி வைக்கும்படி, கணவரும், மகனும் இம்சித்தனர். கவுரம்மா மறுத்து வந்தார். இதற்கிடையே நிலத்தை விற்க முடிவு செய்தார். இது கணவருக்கும், மகனுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. நேற்று அதிகாலை, கவுரம்மா நிலத்தில் இருந்தபோது, சிவராஜும், சித்தராஜுவும் அங்கு வந்தனர். 'நிலத்தை விற்கக் கூடாது' என, இருவரும் தகராறு செய்தனர். மூவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தந்தையும், மகனும் கவுரம்மாவை மரக்கட்டை, இரும்புத் தடியால் சரமாரியாக அடித்தனர். இதில் கவுரம்மா உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த கனகபுரா ஊரக போலீசார், கவுரம்மாவின் உடலை மீட்டனர். சிவராஜ், சித்தராஜுவை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை