உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது

கலபுரகி: குழந்தை இல்லாதது, கூடுதல் வரதட்சணை கொண்டு வர மறுத்ததால், மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். கலபுரகி மாவட்டம் சின்சோலியை சேர்ந்தவர் வக்கீல் சூர்யகாந்த். இவரின் மனைவி பிரியங்கா ஹடபத், 30. இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகின்றன. இதனால் மனைவியிடம் தகராறு செய்து வந்தார் என கூறப்படுகிறது. அத்துடன் கூடுதலாக பணம், வரதட்சணை கொண்டு வரும்படி பிரியங்காவை கொடுமைபடுத்தி வந்தார். நேற்றும் இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபமடைந்த சூர்யகாந்த், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாகி உள்ளார். தகவல் அறிந்த பிரியங்காவின் பெற்றோர், சின்சோலி நகர போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, சூர்யகாந்த் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை