உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தமிழர்கள் எதிர்காலம் குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி நம்பிக்கை

 தமிழர்கள் எதிர்காலம் குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி நம்பிக்கை

பெங்களூரு: தமிழ் சமூகத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளதாக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார். கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், ஐந்தாவது ஆண்டு கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் நாள் விழா, பெங்களூரில் நேற்று கொண்டாடப்பட்டது. 'தினச்சுடர்', 'சஞ்சேவாணி' நிறுவனர் பா.சு.மணி நினைவு நுாலகம் இடம் மாற்றப்பட்டு, ஏற்கனவே நுாலகம் இயங்கி வந்த அதே கட்டடத்தில், தரை தளத்தில் இயங்க உள்ளது. இதை பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவரான தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் திறந்து வைத்து பேசியதாவது: கர்நாடகத்தில் தமிழை வளர்க்கும் பணியை, கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் செய்கிறது. இச்சங்கத்துடன் இணைந்து தமிழை வளர்க்கும் பணியை செய்வதில், எனக்கும் பெருமையாக உள்ளது. நுாலகங்கள் தான், தமிழ் சமூகத்தை வளர்க்கும். தற்போதைய காலம் வேறுபட்டு உள்ளது. கருத்துக்களும் வேறுபட வேண்டும். குழந்தைகளிடம் தமிழ் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைகிறது. குழந்தைகளை ஈர்க்கும் வகையில், நுாலகத்தில் உள்ள புத்தகங்கள் மறுவடிவமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் தமிழ் சமூகத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தமிழ், கன்னட பத்திரிகைகளில் பணி செய்யும் எட்டு பேருக்கு 'கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சாதனை விருது' வழங்கப்பட்டது. சுங்கத்துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் மணிவாசகம், சென்னை பிரசாந்தி முதியோர் இல்ல நிறுவனர் ராஜகோபால பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ