இந்திரா கேன்டீன் மாலுாரில் 27ல் திறப்பு
மாலுார்: ''மாலுாரில் வரும் 27 ம் தேதி இந்திரா கேன்டீன் திறப்பு விழா நடக்கிறது,'' என்று தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா தெரிவித்தார்.மாலுாரில் அவர் அளித்த பேட்டி:கர்நாடகாவில் நகர பகுதியில் உள்ள ஏழைகள், நடுத்தர மக்கள் நலனுக்காக மலிவு விலையில், காலை சிற்றுண்டி, மதியம், இரவு உணவு வழங்கப்படுகிறது. இதனால், கட்டடத்தொழிலாளர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், சுமை தூக்குவோர் என பலரும் பயன்பெற்று வருகின்றனர். எனவே, மாலுாரிலும் இந்திரா கேன்டீன் திறக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. மாலுார் பஸ் நிலையம் அருகே பலருக்கும் பயன்படும் கிடைக்கும் கட்டடம் தயாரானது. ஒரு வழியாக வரும் 27 ம் தேதி அன்று திறக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.