உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் மின் கட்டண உயர்வுக்கு தொழில் துறை கூட்டமைப்பு எதிர்ப்பு

கர்நாடகாவில் மின் கட்டண உயர்வுக்கு தொழில் துறை கூட்டமைப்பு எதிர்ப்பு

பெங்களூரு: பெங்களூரில் உள்ள எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடக தொழில் வர்த்தகம் தொழில் துறை கூட்டமைப்பின், சர் எம்.விஸ்வேஸ்வரய்யா அரங்கில், நேற்று கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணா அளித்த பேட்டி:கர்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம், ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை 36 பைசா உயர்த்திருப்பது சரியல்ல. இதனால் மாநிலத்தின் தொழில் துறை, வணிக நிறுவனங்கள், சிறு வணிகத்தினர் பாதிக்கப்படுவர்.கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியான கட்டண உயர்வுகளால், கர்நாடகாவின் தொழில் துறையில் தேவையற்ற நிதி அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழில் நடத்துவதற்கான செலவு அதிகரிக்கிறது. அதேவேளையில் போட்டி தன்மையும் குறைகிறது.இந்த உயர்வு, உற்பத்தி செலவுகளை மேலும் அதிகரிக்கும். இது எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, நடுத்தர தொழில்களை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்த லாபத்தில் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் செயல்பாடுகளை தக்கவைத்துக் கொள்வதில் சிரமப்படும்.தொழில் உற்பத்தி செலவு அதிகரித்தால், பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டும் அல்லது தொழிற்சாலைகளின் உற்பத்தியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.குறைந்த மின் கட்டணங்களை கொண்ட அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கர்நாடகாவில் தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்து, போட்டி திறனை குறைக்கும்.எனவே, மின் கட்டண உயர்வை எப்.கே.சி.சி.ஐ., வன்மையாக கண்டிக்கிறது. இம்முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை எனில் தொழில்துறை வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை மோசமாக பாதிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை