உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஐ.பி.எஸ்., அதிகாரி இலக்கியாவுக்கு பதவி உயர்வு

 ஐ.பி.எஸ்., அதிகாரி இலக்கியாவுக்கு பதவி உயர்வு

பெங்களூரு: தமிழரான ஐ.பி.எஸ்., அதிகாரி இலக்கியா கருணாகரனுக்கு, டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு கிடைத்து உள்ளது. கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணி செய்யும், தமிழரான இலக்கியா கருணாகரனுக்கு, புத்தாண்டு பரிசாக டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு கிடைத்து உள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவர், பெங்களூரு வயர்லெஸ் பிரிவு டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதவிர தமிழர்களான ஐ.பி.எஸ்., அதிகாரி குடகு எஸ்.பி., ராமராஜன், பெலகாவி எஸ்.பி.,யாகவும், ஹாசன் எஸ்.பி., முகமது சுஜிதா, பெங்களூரு தென்கிழக்கு மண்டல டி.சி.பி.,யாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை தவிர, 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் கிடைத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ