இரும்பு வியாபாரி சுட்டு கொலை காங்., பிரமுகர் உட்பட 2 பேர் கைது
பாகலுார்: பழைய இரும்பு வியாபாரியை சுட்டு கொலை செய்த வழக்கில், காங்கிரஸ் பிரமுகர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில் போட்டியில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. பெங்களூரு பன்னர்கட்டாவை சேர்ந்தவர் இம்ரான் பாஷா, 45. வியாபாரியான இவர், மைசூரு ரோடு பாதராயனபுராவில் பழைய இரும்புகளை வாங்கி விற்கும் தொழிற்சாலை நடத்தினார். அதே பகுதியில் கே.பி.அக்ரஹாராவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் இலாஹி நவீத் பெய்க், 35, என்பவரும் பழைய இரும்புகளை வாங்கி விற்கும் தொழிற்சாலை நடத்தியதால், இம்ரானுக்கும், நவீத்துக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையில் பண விவகாரமும் நடந்துள்ளது. நவீத், இம்ரானுக்கு 2 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால் இம்ரான் கடனை திரும்ப தராமல் இழுத்தடித்தால் இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் தனது கூட்டாளியான முபாரக், 35 என்பவருடன் சேர்ந்து அவரை கொல்ல நவீவ் திட்டமிட்டார். கடந்த 16ம் தேதி எலஹங்கா அருகே பாகலுாருக்கு பேச்சு நடத்த இம்ரானை, நவீத் அழைத்தார். அங்கு காரில் சென்ற இம்ரான், காரில் அமர்ந்தபடியே, நவீத், முபாரக்கிடம் பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் இம்ரான் தலையில் துப்பாக்கியால் சுட்டு, நவீத் கொலை செய்தார். பின், நவீத்தும், முபாரக்கும் பைக்கில் தப்பினர். நேற்று முன்தினம் இரவு முபாரக் கைது செய்யப்பட்டார். நேற்று காலை தனது வக்கீலுடன் சென்று, பாகலுார் போலீசார் முன் நவீத் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் இரும்பு வியாபாரத்தில் தனக்கு போட்டியாக வந்ததால், இம்ரானை தீர்த்துக்கட்டியதாக நவீத் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் பயன்படுத்தியது உரி மம் பெற்ற துப்பாக்கி ஆகும்.