உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சீரகம், கடுகில் கலப்படமா? உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

சீரகம், கடுகில் கலப்படமா? உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

பெங்களூரு: சமையலுக்கு பயன்படும் சீரகம், கடுகிலும் கலப்படம் இருப்பதாக வந்த புகாரை அடுத்து உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.பல்வேறு உணவுப் பொருட்களின் தரத்தை உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு துறை பரிசோதிக்கிறது.பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரி, சிக்கன் கபாப், கேக், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்கை நிறங்கள் பயன்படுத்துவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் உணவுப் பொருட்களில் செயற்கை நிறம் பயன்படுத்த, அரசு தடை விதித்தது.புற்றுநோய் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டதால், இட்லி வேகவைக்க பிளாஸ்டிக் பயன்படுத்தவும் அரசு தடை விதித்தது.இந்நிலையில் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகு, சீரகத்திலும் கலப்படம் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து பெங்களூரின் 50க்கும் மேற்பட்ட கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.கடுகு, சீரகம் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்இன்னும் சில நாட்களில் அறிக்கை வரவுள்ளது. அதன் பின் கடுகு, சீரகம் கலப்படம் செய்யப்பட்டதா, இல்லையா என்பது தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ