உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயல் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யு., இயங்குகிறதா? காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா காட்டம்

 தங்கவயல் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யு., இயங்குகிறதா? காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா காட்டம்

பெலகாவி: ''தங்கவயல் அரசு மருத்துவமனை, தாலுகா தகுதி மருத்துவமனையாக ஆக்காதது ஏன். 24 மணி நேர மருத்துவ அதிகாரி இல்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று தங்கவயல் தொகுதி காங்., எம்.எல்.ஏ., ரூபகலா வலியுறுத்தினார். பெலகாவி சட்டசபை கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தில் அவர் பேசியதாவது: தங்கவயலில் அரசு மருத்துவமனை இருந்தும், சிகிச்சை அளிக்க உரிய மருத்துவர்கள் இல்லை. தங்கச் சுரங்க ஏழைத் தொழிலாளர் குடும்பங்கள் உள்ள தங்கவயலில் 1970 முதலே இம்மருத்துவமனை மாவட்ட சப் டிவிஷனாக இருந்து வந்தது. ஆனால், இன்னும் கூட தாலுகா தகுதியில் இல்லை. சிவானந்த் பாட்டீல், சுகாதார நலத்துறை அமைச்சராக இருந்த போது தங்கவயல் அரசு மருத்துவமனைக்கு எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். இதில் அவசர சிகிச்சைக்காகவும், ஐ.சி.யு.,க்காகவும் புதியதாக கட்டடம் கட்டப் பட்டது. ஆனால், அந்த எமர்ஜென்சி பிளாக்கும், ஐ.சி.யு., பிரிவும் இயங்குகிறதா. சிகிச்சை அளிக்க அதற்கான மருத்துவர்கள் உள்ளனரா. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது: தங்கவயலில் அரசு பொது மருத்துவமனையில் 150 படுக்கைகள், மகப்பேறு மருத்துவமனையில் 100 படுக்கைகள், தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் 130 படுக்கைகள் உள்ளன. 3 மருத்துவமனைகளுமே பயன்பாட்டில் உள்ளது. மாவட்ட மருத்துவ அதிகாரி தகுதியை, 2020ல் அரசு நீக்கியது. இதற்கு மாற்றாக, ஒரு தலைமை மருத்துவரை அரசு நியமித்தது. நடப்பாண்டு செப்டம்பரில் மேலும் ஒரு மருத்துவரை அரசு நியமனம் செய்தது. தேவைக்கேற்ப அடுத்த ஆண்டு கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ