உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ ரயில் ஓட்டுநர் பணி பிற மாநிலத்தவருக்கு வழங்க திட்டம்?

மெட்ரோ ரயில் ஓட்டுநர் பணி பிற மாநிலத்தவருக்கு வழங்க திட்டம்?

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ நிறுவனம், ரயில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அழைத்துள்ளது. இதில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வேறு மொழியினருக்கு வாய்ப்பு அளிப்பதாக, சர்ச்சை வெடித்துள்ளது.பெங்களூரு மெட்ரோ நிறுவனம், 50 ரயில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதற்காக விண்ணப்பம் அழைத்துள்ளது.

கால அவகாசம்

ஆர்வம் உள்ளவர்கள், ஏப்ரல் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கூறியுள்ளது. வயது கட்டுப்பாடு அதிகபட்சம் 38 இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுஉள்ளது.கன்னட மொழியை புரிந்து கொள்ள, எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கன்னடம் தெரியாதவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் கன்னடம் கற்று, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் நடத்தும் கன்னட தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிக்கையில் கூறியுள்ளது.இது கன்னட அமைப்பினருக்கு அதிருப்தி அளித்துள்ளது.மெட்ரோ நிறுவனத்தின் மனித வளம் பிரிவில், தமிழகம் மற்றும் ஆந்திரா அதிகரிகள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வசதி செய்து தரும் நோக்கில், ரயில் ஓட்டுநர்களாக விண்ணப்பம் தாக்கல் செய்வோர், கன்னடம் கற்க ஓராண்டு கால அவகாசம் அளித்துள்ளதாக, மெட்ரோ ஊழியர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து, பெங்களூரு மெட்ரோ ஊழியர்கள் சங்க துணை தலைவர் சூர்ய நாராயணா கூறியதாவது:தமிழகம், ஆந்திரா மெட்ரோ நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர்களை ஈர்க்க, அவர்களுக்கு வசதி செய்யவும், கன்னடம் அல்லாதவர்களும் ரயில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

யூனியன்

தமிழர்கள், தெலுங்கர்கள் கன்னடம் கற்க ஓராண்டு கால அவகாசம் அளிப்பதற்கு பதில் கன்னடர்களுக்கு சில மாதங்கள் பயிற்சி அளித்து, ரயில் ஓட்டுநர் பணிகளில் அமர்த்த வேண்டும்.கன்னடர்களை ரயில் ஓட்டுநர்களாக நியமித்தால், யூனியன் அமைப்பர். அதிகாரிகளின் பேச்சை கேட்கமாட்டார்கள் என, நினைத்து வேறு மாநிலத்தவருக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். உடனடியாக அறிவிப்பை, திரும்ப பெற்று கன்னடர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி