கமல்ஹாசன் பேனர் பெங்களூரில் கிழிப்பு
பெங்களூரு : நடிகர்கள் கமல், சிம்பு நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான, 'தக் லைப்' திரைப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர் கமல் பேசுகையில், 'தமிழில் இருந்து உருவானது தான், கன்னட மொழி' என்றார். இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால், கன்னட அமைப்புகள் கோபத்தை வெளிப்படுத்தின. பெங்களூரில் நேற்று, 'தக் லைப்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கமல், சிம்புவை வரவேற்று ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களை, கன்னட அமைப்பினர் கிழித்தனர்.