காமராஜர் பிறந்த நாள் நாளை நடைபயணம்
பெங்களூரு: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, பெங்களூரில் நாளை நடைபயணம் நடக்கிறது. கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் மற்றும், 'ஓடோனா பன்னி' அமைப்பு இணைந்து, தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின், 124வது பிறந்த நாளை முன்னிட்டு, பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நாளை, 'வாக்கத்தான்' எனும் நடை பயணத்தை நடத்துகின்றனர். இந்த நடைபயணம், 3 கி.மீ., மற்றும் 5 கி.மீ., என இரு பிரிவுகளில் நடக்கிறது. அனைத்து வயதினரும், இவற்றில் பங்கேற்கலாம். தொடர்புக்கு, சசிகாந்த் சங்கேஸ்வரன் என்பவரை, 99455 13612 என்ற மொபைல் நம்பரில் அழைக்கலாம்.