உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கன்னட திரையுலகினர் ஆலோசனை

கன்னட திரையுலகினர் ஆலோசனை

பெங்களூரு: பெங்களூரின், நாகவராவில் உள்ள நடிகர் சிவராஜ்குமாரின் இல்லத்தில் கன்னட திரையுலகின் உயர்மட்ட கூட்டம், நேற்று நடந்தது. திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பட வினியோகஸ்தர்கள், நடிகர்கள் 'துனியா' விஜய், கணேஷ், துருவா சர்ஜா உட்பட, பலர் பங்கேற்றனர்.குறைந்து வரும் கன்னட திரைப்படங்கள், டிக்கெட் கட்டண விவகாரம், திரையரங்குகளில் பார்வையாளர்கள் குறைவது உட்பட, கன்னட திரையுலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து, ஆலோசனை நடந்தது.இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, அனைவரும் கருத்துகள், ஆலோசனகளை கூறினர். திரையுலக பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படி, மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.விரைவில் நடிகர் சிவராஜ் குமார் தலைமையில், முதல்வர் சித்தராமையாவை சந்திக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ