உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடக பா.ஜ.,வுக்கு அதிக நன்கொடை

கர்நாடக பா.ஜ.,வுக்கு அதிக நன்கொடை

பெங்களூரு; கர்நாடகாவில் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்தும், அதிகமான நன்கொடை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி பா.ஜ.,வுக்கு ஒரே ஆண்டில் 75.54 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.அரசியல் கட்சிகளுக்கு, தொழிலதிபர்கள் உட்பட, பலரும் நன்கொடை வழங்குவது வழக்கம். 2023 - 24ம் ஆண்டு, எந்தெந்த கட்சிகளுக்கு, எவ்வளவு நன்கொடை கிடைத்தது என, ஏ.டி.ஆர்., எனும் அசோசியேஷன் டெமாக்ரடிக் என்ற அமைப்பு, ஆய்வு செய்து, தகவல் வெளியிட்டுள்ளது.பொதுவாக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு, அதிகமான நன்கொடை கிடைப்பது வழக்கம். எதிர்க்கட்சிகளை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.ஆனால் கர்நாடகாவில், இதற்கு நேர் எதிராக நடந்துள்ளது. ஆளுங்கட்சியாக காங்கிரசை விட, எதிர்க்கட்சி பா.ஜ.,வுக்கு அதிகமான நிதி கிடைத்துள்ளது.கர்நாடகாவில் அரசியல் கட்சிகளுக்கு, 2023 - 24ம் நிதியாண்டில், மொத்தம் 98.60 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இதில் பா.ஜ.,வுக்கு மட்டுமே 75.54 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. காங்கிரசுக்கு 17.01 கோடி ரூபாயும், ஆம் ஆத்மிக்கு 6.06 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை