உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜெ.,வின் ரூ.2,000 கோடி நகை, சொத்து தமிழக அரசிடம் கர்நாடகா ஒப்படைப்பு

ஜெ.,வின் ரூ.2,000 கோடி நகை, சொத்து தமிழக அரசிடம் கர்நாடகா ஒப்படைப்பு

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை, தமிழக அரசிடம் கர்நாடகா அரசு ஒப்படைத்து உள்ளது.'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள், நில பத்திரங்களை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம், கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும். 'நகைகளை எடுத்து செல்ல, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைத்து ஏற்பாடுகளுடன் பெங்களூரு வந்து, பிப்ரவரி 14, 15ம் தேதிகளில் எடுத்து செல்ல வேண்டும்' என, கடந்த மாதம் 29ம் தேதி, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.இந்த உத்தரவின்படி, கடந்த 13ம் தேதி இரவே, தமிழக உள்துறை இணை செயலர் ஆனி மேரி சுவர்ணா, லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., புகழ்வேந்தன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், பெங்களூரு வந்தனர்.நேற்று முன்தினம் காலையில், விதான் சவுதாவில் உள்ள கருவூலத்தில் இருந்த ஆறு பெட்டிகளில், நான்கு பெட்டிகளில் இருந்த நகைகள், சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு எடுத்து வரப்பட்டன. நீதிபதி மோகன், ஆனி மேரி சுவர்ணா, விமலா, புகழ்வேந்தன், பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேகர் மேற்பார்வையில், நகைகளை சரிபார்க்கும் பணி நடந்தது.

நில ஆவணம்

நீதிபதி மோகனிடம் என்னென்ன நகைகள் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டது. அவர் பட்டியலை வாசிக்க, நகை மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்தார். பின், நகைகள் மீண்டும் பெட்டிக்குள் வைக்கப்பட்டன. மாலை 5:45 மணி வரை, மூன்று பெட்டிகளில் இருந்த நகைகள் மட்டுமே எண்ணப்பட்டன. இந்த மூன்று பெட்டிகள், எண்ணப்படாத பெட்டியில் இருந்த நகைகள் மீண்டும் விதான் சவுதாவுக்கு எடுத்து செல்லப்பட்டன.நேற்று காலை, 10:00 மணிக்கு விதான் சவுதாவில் இருந்து, ஆறு பெட்டிகளும் நீதிமன்றத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டன. நீதிபதி மோகன் முன்னிலையில், இரண்டாவது நாளாக நகைகளை சரிபார்க்கும் பணி நடந்தது. நேற்று முன்தினம் யார், யார் இருந்தனரோ அவர்கள் அப்படியே இருந்தனர். காலை 10:30 மணிக்கு ஆரம்பித்த நகை சரிபார்க்கும் பணி, மதியம் 1:00 மணிக்கு முடிந்தது.பின், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கொண்டு வந்த, ஆறு இரும்பு பெட்டிகளில் நகைகள் அடுக்கி வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டன. இதையடுத்து, ஜெயலலிதா பெயரில் இருந்த 1,000 ஏக்கர் நில ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை சூட்கேஸ்களில் வைத்தனர். வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும், உங்களிடம் ஒப்படைத்து விட்டோம் என்று கூறி, தமிழக அதிகாரிகளிடம் கர்நாடக அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனர்.

ஏழு வாகனங்கள்

இந்த நடைமுறைகள் முடிந்த பின், மதியம், 3:30 மணிக்கு நீதிபதி அறையில் இருந்து, இரும்பு பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டன. மூன்றாவது மாடியில் உள்ள நீதிபதி அறையில் இருந்து, லிப்ட் மூலம் ஆறு பெட்டிகளும் தரைதளத்திற்கு கொண்டு வரப்பட்டன. முன்னதாக தமிழக அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம், கவனமாக செல்லுங்கள் என்று நீதிபதி மோகன் கூறினார்.தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஏ.எஸ்.டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான வேனில், நகைகள் இருந்த ஆறு பெட்டிகளும் சரியாக மாலை 3:45 மணிக்கு ஏற்றப்பட்டன. நில ஆவணங்கள் இருந்த சூட்கேஸ்கள், போலீசாரின் உடைமைகள் தொடர்ச்சி 5ம் பக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ