மேலும் செய்திகள்
ஆடு மேய்ப்பவரை கொன்ற கரடியை சாகடித்த கிராமத்தினர்
1 minutes ago
தர்பூசணி, திராட்சை மேளா தயாராகும் ஹாப்காம்ஸ்
1 minutes ago
கன்னடர்கள் சிக்கி தவிப்பு செய்திக்கு ஆட் ….
2 minutes ago
பெங்களூரு: ஹூப்பள்ளியில், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவரை, போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் குறித்து, நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றம், அந்த விசாரணையில் குறைபாடுகள் இருந்தால், வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது. தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளின் அசோக் நகரில், கடந்தாண்டு ஏப்ரலில், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவரை பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை தாக்க முயற்சித்த நபரை, தற்காப்புக்காக சுட்டனர். இதில், அந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பி.யு.சி.எல்., எனும் மக்கள் சுதந்திர சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், 'இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரூ, நீதிபதி பூனாச்சா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணை நடந்து வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி வாதிடுகையில், ''உச்ச நீதிமன்றம், தேசிய மனித உரிமைகள் கமிஷன் வழிகாட்டுதல்படி சுதந்திரமாக விசாரிக்க வேண்டும் என்பதற்காக, இவ்வழக்கு சி.ஐ.டி., போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், இவ்வழக்கு நீதி விசாரணைக்கு ஒப்படைக்கப்படும்,'' என்றார். பி.யு.சி.எல்., தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'என்கவுன்டரின் போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. இவ்வழக்கு தொடர்பாக, என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது தனியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்' என்றார். நீதிபதிகள், 'சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவரை, போலீசார் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக, நீதி விசாரணை நடத்த வேண்டும். ஜூன் மாதம் இறுதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதில் குறைபாடுகள் இருந்தால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது நேரிடும்' என எச்சரித்து, விசாரணையை ஒத்தி வைத்தனர்.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago