உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆந்திராவுக்கு கர்நாடக கும்கிகள் 21 ம் தேதி அனுப்பி வைப்பு

ஆந்திராவுக்கு கர்நாடக கும்கிகள் 21 ம் தேதி அனுப்பி வைப்பு

பெங்களூரு: ஆந்திராவில் காட்டு யானைகளை விரட்ட, கர்நாடகாவில் இருந்து நான்கு கும்கிகள் வரும் 21 ம் தேதி அனுப்பி வைக்கப்படுகின்றன.கர்நாடக வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பெங்களூரு வந்தார். விதான் சவுதாவில் முதல்வர், துணை முதல்வரை சந்தித்தார். ஆந்திராவில் காட்டு யானைகளை விரட்ட, கர்நாடகாவில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற கும்கி யானைகளை அனுப்பும்படி கேட்டு கொண்டார். கடந்த ஆண்டு செப்டம்பரில், நமது அதிகாரிகள் குழு ஆந்திரா சென்றது. நமது யானைகளை அங்கு அனுப்புவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.இந்த ஒப்பந்தத்தின்படி வரும் 21 ம் தேதி, பெங்களூரில் இருந்து கும்கிகள் ஆந்திராவுக்கு செல்கின்றன. விதான் சவுதாவில் நடக்கும் நிகழ்ச்சியில் யானைகளை, முதல்வர் வழியனுப்பி வைக்கிறார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்கிறார்.கோலார் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் ஆந்திராவின் எல்லை பகுதியில் வருகிறது. அங்கு யானைகள் தாக்குதல் அதிகரித்து உள்ளது. ஆந்திர வனப்பகுதியில் சுற்றிதிரியும் யானைகள் நமது மாநிலத்திற்கு வரவும் வாய்ப்பு உள்ளது.இப்போது, நாம் கும்கிகளை அனுப்புவதன் மூலம், யானைகள் நமது மாநிலத்திற்குள் வருவது தடுக்கப்படும். இது நமக்கு மறைமுக பயன் அளிப்பதாக உள்ளது. மைசூரு தசராவில் பங்கேற்கும் கும்கிகளை, ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கவில்லை. எத்தனை யானைகள், எந்த முகாம் என்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை