உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நிழல் உலக தாதாக்களின் கூட்டாளி கவிராஜ் கைது

நிழல் உலக தாதாக்களின் கூட்டாளி கவிராஜ் கைது

கோலார்: பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரி, முத்தப்பா ராய் கூட்டாளி கவிராஜ் கைது செய்யப்பட்டார். நிழல் உலக தாதாக்கள் ரவி பூஜாரி, முத்தப்பா ராய் ஆகியோரின் கூட்டாளியான கவிராஜ், 2022ம் ஆண்டு பா.ஜ., முன்னாள் அமைச்சர் வர்த்துார் பிரகாஷை கடத்திய வழக்கு உட்பட 14க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இவர் கர்நாடகா, தமிழகம், உத்தரகண்ட், நேபாளத்திலும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவரை கண்டுப்பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. தலைமறைவாக இருந்த கவிராஜ், ஜூலை 31 அன்று உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் பிடிபட்டார். இவர், கோலார் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கோலார் எஸ்.பி., நிகில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி