உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பிடதியில் கேரள பஸ் விபத்து ஓட்டுநர், நடத்துநர் பலி

 பிடதியில் கேரள பஸ் விபத்து ஓட்டுநர், நடத்துநர் பலி

ராம்நகர்: ராம்நகரில் கேரள அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர், நடத்துநர் பலியாகினர். கேரள மாநிலம் கோழிக்கோடில் இருந்து பெங்களூருக்கு நேற்று முன்தினம் இரவு கேரள அரசு பஸ், 25க்கும் மேற்பட்ட பயணியருடன் வந்து கொண்டிருந்தது. பெங்களூரு தெற்கு மாவட்டம் ராம்நகர் பிடதியில் உள்ள ஹெக்கடகெரே பாலம் அருகே நேற்று காலை 6:00 மணிக்கு வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழுந்த பஸ், தாறுமாறாக சென்று கவிழ்ந்தது. இந்த விபத்தில், கோழிக்கோடுவை சேர்ந்த நடத்துநர் அருண் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அப்பகுதியில் இருந்த மக்கள் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பஸ் ஓட்டுநர் பிஜிலேஷ், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 14 பேர், ராஜராஜேஸ்வரி மருத்துவ கல்லுாரி மற்றும் கெம்பண்ணா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஓட்டுநர் துாங்கியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ