உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொலையாளிக்கு முத்தம்; போலீஸ் காவலில் அதிர்ச்சி

கொலையாளிக்கு முத்தம்; போலீஸ் காவலில் அதிர்ச்சி

மங்களூரு; போலீஸ் பாதுகாப்பில் இருந்த கொலையாளிக்கு, வாலிபர் முத்தம் கொடுத்து உள்ளார்.தட்சிண கன்னடாவின் சுள்ளியா தாலுகா, பெல்லாரே கிராமத்தில் வசித்தவர் பிரவீன் நெட்டாரு. மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி தலைவராக இருந்தார். கடந்த 2022ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ., 21 பேரை கைது செய்து உள்ளது. இவர்களில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் ஷாபி பெல்லாரேயும் ஒருவர்.தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். கடந்த 2017ல் ஹிந்து அமைப்பின் கல்லடுக்கா பிரபாகர் பட்டை அவதுாறாக பேசியது தொடர்பாக, பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் ஷாபி பெல்லாரே மீது வழக்குப்பதிவானது. இந்த வழக்கில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, பெல்தங்கடி போலீசார் காவலில் எடுத்தனர். நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு இரண்டு போலீசார் வெளியே அழைத்து வந்தனர். நீதிமன்ற வாசலில் நின்ற வாலிபர் ஒருவர், போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஷாபி பெல்லாரே நெற்றியில் முத்தம் கொடுத்தார். இதை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை