உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலீஸ் நிலையங்கள் முற்றுகை சிவகுமாருக்கு குமாரசாமி எச்சரிக்கை

போலீஸ் நிலையங்கள் முற்றுகை சிவகுமாருக்கு குமாரசாமி எச்சரிக்கை

பெங்களூரு: ‘‘எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று காலை 10:00 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையெனில் போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்,’’ என மத்திய அமைச்சர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார். எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது, சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த வாக்காளர்களை நீக்க முயன்றதாக, பா.ஜ.,வினர் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. இந்த வழக்குகளை திரும்ப பெறக்கோரி, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமாரை, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர். பின், குமாரசாமி கூறியதாவது: படிவம் 7ஐ சமர்ப்பிப்பது ஒரு சராசரி குடிமகனின் உரிமை. இதற்காக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது சரியல்ல. எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு 6ம் தேதி காலை 10:00 மணி வரை அவகாசம் வழங்குகிறேன். தேர்தல் ஆணையம் விளக்கம் தரவில்லையெனில், போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இதுபோன்று வேறு எந்த மாநிலங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. பா.ஜ., – ம.ஜ.த., தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முதல்வர் சிவகுமார் அழுத்தம் கொடுக்கிறார். இந்த விவகாரத்தை வலியுறுத்தி, சிவகுமார் போல நாங்களும் போராட்டம் நடத்த விரும்பவில்லை. அவருக்கு அறநெறி தெரியாது. இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை